இலங்கை

இலங்கை போக்குவரத்து சபைக்கு நாளாந்த 25 மில்லியன் ரூபா வருமானம்

Published

on

இலங்கை போக்குவரத்து சபைக்கு நாளாந்த 25 மில்லியன் ரூபா வருமானம்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு நடத்தப்படும் விசேட பேருந்து சேவையின் மூலம் நாளாந்த வருமானம் 25 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பண்டிகைக்காலங்களில் கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக, கடந்த 5 ஆம் திகதி முதல் சுமார் 200 கூடுதல் NTC | Homeஇயக்கப்பட்டு சிறப்பு போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாளாந்த வருமானம் 25 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நெடுஞ்சாலைகளின் வருமானம் நேற்று 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இன்றும் 15 ஆம் திகதிக்கும் இடையில் நெடுஞ்சாலைகளின் வருமானம் கணிசமான அளவு உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாகவும் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த 10 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை கூடுதலாக 12 தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Exit mobile version