அரசியல்

புத்தாண்டின் பின்னர் விஸ்வரூபமெடுக்கப்போகும் சுதந்திரக்கட்சி மோதல்

Published

on

புத்தாண்டின் பின்னர் விஸ்வரூபமெடுக்கப்போகும் சுதந்திரக்கட்சி மோதல்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நெருக்கடி நீடிப்பதால் கட்சித் தலைமையகத்தைக் கைப்பற்றும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என இரு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

புத்தாண்டு விடுமுறையின் பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை திறந்து அதிகாரத்தை கைப்பற்றி கட்சியின் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவுடன் செயற்படும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அணியினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பு உடனடியாக மாற்றப்பட்டு, நாயக்கா என்ற புதிய பதவி நிறுவப்படும் எனவும், முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு இனி அதன் தலைவர் பதவியில் இருக்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவு குழுவிற்கு கட்சியின் அதிகாரம் இல்லை என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவான குழு குறிப்பிடுகின்றது.

நிமல் சிறிபால டி சில்வாவை பதில் தலைவர் பதவியில் இருந்து நீக்கவுள்ளதாகவும், அதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அந்த குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இரண்டு குழுக்களாக பிளவுபட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நெருக்கடி புத்தாண்டு பண்டிகை காலத்தின் பின்னர் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என இரு குழுக்களின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version