இலங்கை

23 மாதங்களில் நாட்டில் ஏற்பட்ட மாற்றம்

Published

on

23 மாதங்களில் நாட்டில் ஏற்பட்ட மாற்றம்

2022இல் சுவாசித்ததை விட பத்து மடங்கு அதிகமாக சுவாசிக்கக்கூடிய சூழலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இன்று உருவாக்கியுள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.

கடந்த 23 மாதங்களில் நாட்டை முந்தைய பொருளாதார நிலைக்கு கொண்டு வர அவரால் முடிந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் வீடுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 2022இல் சுவாசித்ததை விட பத்து மடங்கு அதிகமாக சுவாசிக்கக்கூடிய சூழலை இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உருவாக்கியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் மூன்று வேளையும் சாப்பிட முடியாமல், வரிசையில் நின்று அவதிப்படும் சமுதாயம் இருந்தது.

அப்போது ஜனாதிபதி பதவியை ஏற்று மக்களுக்காக பாடுபடுங்கள் என அன்றைய ஆட்சியாளர்கள் எவ்வளவோ கூறினாலும் அந்த சவாலை ஏற்றுக் கொள்ளும் தலைவர் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை.

ஆனால் நாடாளுமன்றத்தில் தனி ஆசனம் பெற்ற ரணில் விக்ரமசிங்க அந்த சவாலை ஏற்று மக்களை வாழ வைக்கும் பொருளாதார நிலையை உருவாக்கியிருந்தார். கடந்த 23 மாதங்களில் நாட்டை முந்தைய பொருளாதார நிலைக்கு கொண்டு வர அவரால் முடிந்தது.

இன்று புறக்கோட்டை, மஹரகம, பதுளை உள்ளிட்ட இலங்கையின் எந்த நகரத்திலும், பெருந்திரளான மக்கள் பண்டிகை காலத்திற்காக பல்வேறு கொள்முதலில் ஈடுபடுகின்றனர். நாட்டின் பொருளாதாரம் மீண்டுள்ளது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் சவாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் இன்று நாடு எந்த நிலையில் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் இன்று விவாதத்திற்கு அழைப்பு விடுக்கும் எதிர்க்குழுக்களிடம், ஏன் அன்று சவாலை ஏற்கவில்லை என்று கேட்க வேண்டும்.

அந்த அந்தக் குழுக்களுக்கு பொருளாதாரக் கோட்பாடு மட்டுமே தெரியும். அவர்களுக்கு நடைமுறை பொருளாதாரம் தெரியாது. அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிக்கவும் ஜனாதிபதி ஏற்பாடு செய்தார். தொழிலாளர்களுக்காக பேசும் எந்த கட்சியும் இவ்வளவு கூலி உயர்வு செய்யவில்லை. இன்று ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றுள்ளது. நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.

ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் மீது சர்வதேச சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளதாலேயே இவை அனைத்தும் நடக்கின்றன. எனவே இன்று வீட்டிற்குச் சென்று உங்களுக்கு கிடைத்த வீட்டைப் பற்றி மீண்டும் சிந்தியுங்கள். தவறை மீண்டும் செய்தால், நம்மை விட நம் குழந்தைகள் எதிர்காலத்தை இழக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version