இலங்கை

ரணிலுக்கு தேரர் வழங்கியுள்ள ஆலோசனை

Published

on

ரணிலுக்கு தேரர் வழங்கியுள்ள ஆலோசனை

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickrenasinghe) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கென ஒரு ஆணையை பெற்றால், சீர்திருத்தங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியும் என சியாம் மஹா நிகாய பீடத்தின் கோட்டே சங்க சபையின் பிரதம பீடாதிபதி இட்டப்பன தம்மாலங்கார அனு நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவான் விஜேவர்தனவை சந்தித்த போதே தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றவர்கள் பெற்ற வாக்குகள் மூலம் சீர்திருத்தங்களை ஜனாதிபதியினால் கொண்டு வரமுடியாது.

இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) போன்ற வேறு வேட்பாளர்கள் இருப்பார்கள்.

எனினும், ரணில் விக்ரமசிங்கவே அரசியல்ரீதியாக மிகவும் முதிர்ச்சியடைந்த வேட்பாளராக இருப்பார் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version