இந்தியா

இந்தியாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! இலங்கைக்கு அழைப்பு

Published

on

இந்தியாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! இலங்கைக்கு அழைப்பு

இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சி, இலங்கை உட்பட 25 நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தமது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய தேர்தல்களையும் அதனுடன் கூடிய பிரசாரத்தையும் பார்ப்பதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது உலகெங்கிலும் உள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இந்த அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அண்டை நாடுகள் போன்ற பல்வேறு பிராந்தியங்களின் பிரதிநிதிகள் இதில் உள்ளடங்குகின்றனர்.

தகவல்களின்படி நேபாளம், பங்களாதேஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் அரசியல் கட்சிகள் பாரதீய ஜனதாவிடம் இருந்து அழைப்புகளைப் பெற்றுள்ளன, தற்போதைய நிலவரப்படி, 15 நாடுகளின் பிரதிநிதிகளிடமிருந்து பங்கேற்றல் உறுதிப்படுத்தல்கள் பெறப்பட்டுள்ளன.

பாரதிய ஜனதா கட்சியின் வெளியுறவுத் துறைக்கு பொறுப்பானவரான. விஜய் சௌதைவாலே, இது தொடர்பான அழைப்புக்களை அனுப்பியுள்ளார்.

ஐரோப்பிய அரசியல் கட்சிகளின் உறுதிப்பாடுகள் இன்னும் வரவில்லை “உங்கள் பாரதீய ஜனதாவை அறிந்து கொள்ளுங்கள்” என்பதன் கீழ், டெல்லியை சேர்ந்த வெளிநாட்டு தூதர்களுக்கு பாரதீய ஜனதா இந்த அழைப்புக்களை அனுப்பியுள்ளது.

97 கோடி வாக்காளர்களுடன், இந்தியாவின் ஏழு கட்ட பொதுத்தேர்தல், ஏப்ரல் 19ஆம் திகதி ஆரம்பித்து ஜூன் 4 ஆம் திகதி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version