இலங்கை

இனிப்பு பண்டங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மக்களுக்கு எச்சரிக்கை

Published

on

இனிப்பு பண்டங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மக்களுக்கு எச்சரிக்கை

புத்தாண்டின்(Sinhala and Tamil New Year) போது விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பணத்திற்காக சிலர் இனிப்பு வகைகளை தரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்து வருவதாக சுகாதார அமைச்சின் சுற்றாடல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு சுகாதார பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் திலக் சிறிவர்தன(Dr. Thilak Siriwardena )தெரிவித்துள்ளார்.

அத்துடன் காலாவதி திகதி மற்றும் உள்ளடக்கம் குறித்து உரிய முறையில் குறிப்பிடாமல் உணவு பொருட்களை விற்பனை செய்வதால் நோய் ஏற்பட கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த பண்டிகைக் காலத்தில் தேவையற்ற இனிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்படுமாயின் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்க முடியும் என்றும் அவ்வாறு அறிவிக்க முடியாத பட்சத்தில் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் 0112112718 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவில் இருந்து தேவையான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது பொது சுகாதார பரிசோதகர்கள் பாவனைக்கு பொருத்தமற்ற உணவு மற்றும் பானங்களை விற்பனை செய்யும் நிலையங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version