இலங்கை

12ஆம் திகதி பொது விடுமுறை! வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை விநியோகிக்க வேண்டிய நிலை

Published

on

12ஆம் திகதி பொது விடுமுறை! வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை விநியோகிக்க வேண்டிய நிலை

மத்திய தபால் பரிவர்த்தனைக்கு இந்த புத்தாண்டுக் காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பொருட்களை வந்தடைந்துள்ளன. வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிக அளவில் பொருட்களை அனுப்பியுள்ளனர். புத்தாண்டு காலம் என்பதால் அந்த பொருட்களை துரிதமாக விநியோகிக்க வேண்டிய சவால் ஏற்பட்டுள்ளது என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார(Shantha Bandara) தெரிவித்துள்ளார்.

இதன் போது, நெருக்கடிகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் ஏப்ரல் 12ஆம் திகதி பொது விடுமுறையாக இருந்தாலும் அன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்க தபால் மா அதிபர் மற்றும் தபால் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். சுங்கத் திணைக்கள் அதிகாரிகளும் அதற்கான ஒத்துழைப்பை வழங்கவுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த சில ஆண்டுகளாக மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டனர். எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நின்றனர். ஆனால் இம்முறை புத்தாண்டுக்குள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்காமல் ஆடைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் திரள்வதை காணமுடிகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் பலனாகவே இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதியின் சரியான வழிக்காட்டலின் கீழ் கிடைத்த வெற்றியின் பலனை மக்கள் அனுபவிக்கின்றனர்.

மேலும், புத்தாண்டுக் காலத்தில் உணவு பொருட்களின் விலை இரட்டிப்பாகி உள்ளதென பலரும் சாடினாலும், 2022/2023 ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது உண்மை புரியும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version