இலங்கை

கட்சியையும் நாட்டையும் அழித்த மைத்திரிக்கு பைத்தியம்: சந்திரிக்கா கடும் தாக்கு

Published

on

கட்சியையும் நாட்டையும் அழித்த மைத்திரிக்கு பைத்தியம்: சந்திரிக்கா கடும் தாக்கு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை (Sri Lanka Freedom Party) நிரந்தரமாக மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை (Nimal Siripala de Silva) பதில் தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுத்ததாக அக்கட்சியின் புரவலர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் நேற்று முன்தினம் (08) கலந்து கொண்ட முன்னாள் அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) 2015ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்றதன் பின்னர் கட்சியையும் நாட்டையும் அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

“2015ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு எல்லோரும் என்னிடம் சொன்னார்கள். ஆனால் பொதுச் செயலாளர் மைத்திரிபால பெரும் எதிர்பார்ப்புடன் வேண்டாம் என்று கூறினார்.

மைத்திரிபால சிறிசேன கட்சி அரசியலமைப்பை முற்றாகக் குழப்பிவிட்டார். நான் நீக்கப்பட்டதாகவும், மீண்டும் நீக்கவில்லை என்றும் கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவர் உண்மையிலேயே பைத்தியம்தான் என முன்னாள்அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version