இலங்கை

30 ரூபாவாக முட்டை விலை

Published

on

30 ரூபாவாக முட்டை விலை

கடந்த மாதங்களில் வேகமாக அதிகரித்து வந்த மரக்கறிகளின் விலையும் மரக்கறிகளின் தட்டுப்பாடும் தற்போது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு தேவையான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, காய்கறிகள், முட்டை, கோழி இறைச்சி மற்றும் பழங்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டினது உற்பத்தியை அதிகரிப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் தேவைக்கு அதிகமாக அத்தியாவசியப் பொருட்கள் சந்தையில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக காணப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் புத்தாண்டுக்கு முன்னர் ஒரு கிலோ கரட்டின் விலை 5,000 ரூபாவாக அதிகரிக்கும் என பலர் கூறிய போதிலும் தற்போது கரட் மட்டுமன்றி அனைத்துப் பொருட்களினதும் விலை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி மே மாதத்திற்கு முன்னர் முட்டையினது விலை 30 ரூபாவாக குறைக்கப்படும் எனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version