இலங்கை

60 வயதை கடந்த 57 பேர் நாடாளுமன்றில் அங்கம்

Published

on

60 வயதை கடந்த 57 பேர் நாடாளுமன்றில் அங்கம்

இலங்கையில் 60 வயது முதல் 90 வயது வரையிலான வயதுகளை உடைய 57 பேர் நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க (Champika Ranavaka) தெரிவித்துள்ளார்.

எனினும், நாற்பது வயதுக்கும் குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 26 மட்டுமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இளைஞர், யுவதிகள் சுதந்திரமாக அரசியலில் ஈடுபடக்கூடிய பின்னணியை உருவாக்குதல் காலத்தின் தேவை என அவர் தெரிவித்துள்ளார்.

வயது முதிர்ந்தவர்கள் இந்த சூழ்நிலையை இளையோருக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பத்தரமுல்ல பகுதியில் நடைபெற்ற இளைஞர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் மிகவும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் காணப்படுவதாகவும் இதனையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Exit mobile version