இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

Published

on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில்(Anuradhapura) நேற்று (07.04.2024) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது ,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் உறுப்பினர்களுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி, கூட்டணி அமைப்பது சவாலானது அல்ல.

பத்து கூட்டணிகள் அமைந்தாலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்கள் கட்சியின் உறுப்பினர்கள், எல்லா இடங்களிலும் கூட்டணிகளிலும் இருப்பது நல்லது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை கட்சி கண்டிப்பாக அறிவிக்கும். கட்சியின் தீவிர உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது மகனுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கின்றது”என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version