இலங்கை

குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

Published

on

குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தினசரி உபயோகத்தின் போது பல்வேறு வகையான குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கைத்தொலைபேசிகளுக்கு வரும் சில தனிப்பட்ட குறுஞ்செய்திகளில் சில இணைப்பின் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கான மோசடி நடவடிக்கை இடம்பெறுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்திகளில் வரும் இணைப்புகள் உங்களை ஏமாற்றும் வகையில் சில பரிசுத்தொகையை வெல்வது அல்லது வேலை வாய்ப்பை வழங்குவது என்ற போர்வையில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சில சந்தர்ப்பங்களில், இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம், உங்கள் கையடக்க தொலைபேசியில் ஒரு போலி மென்பொருள் நிறுவப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version