இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி: கவலை வெளியிடும் சஜித்தின் சகா

Published

on

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி: கவலை வெளியிடும் சஜித்தின் சகா

பல்வேறு கட்சிகளை ஐக்கிய மக்கள் சக்திக்குள் இணைத்து ஜன கூட்டணி அமைப்பது பொருத்தமற்ற விடயம் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க(Tissa Attanayake) கவலை வெளியிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

மேலும், புதிய கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு உரிய முறையில் விளக்கமளிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே குற்றச்சாட்டை அதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவும் முன்வைத்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) புதிய கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின்(Sajith Premadasa) தலைமையில் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஐக்கிய மக்கள் கூட்டணியை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன்படி ஒப்பந்தத்தில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, கே.பி. குமாரசிறி, கலாநிதி உபுல் கலப்பட்டி மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்துள்ளனர்.

Exit mobile version