இலங்கை

ரஷ்யா – உக்ரைன் போரில் இலங்கை படை

Published

on

ரஷ்யா – உக்ரைன் போரில் இலங்கை படை

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரில் இலங்கை படையினர் பங்களிப்பை வழங்கி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது இலங்கையின் ஆயுதப்படையினர் கூலிப்படையாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய படையினரின் சார்பாகவும் உக்கரையின் படையினரின் சார்பாகவும் பொருளாதார நலன்களினால் சுமார் நூற்றுக்கணக்கான இலங்கை படையினர் பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளில் போரில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான முன்னாள் படை வீரர்கள் இவ்வாறு ரஷ்யா மற்றும் உக்கிரேன் சார்பில் போரில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை இராணுவத்திலிருந்து விலகி ரஷ்ய படையில் இணைந்து கொண்ட படைவீரர் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தமை குறித்த தகவல்களை ஊடகம் ஒன்று அறிக்கையிட்டிருந்தது.

கடந்த 2009ஆம் ஆண்டில் இலங்கை அரச படையினர் பெரும் எண்ணிக்கையிலான போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

தமிழர்கள் மீது பாரியளவில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டதாகவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் குடியுரிமை மற்றும் மாதாந்தம் 2000 டொலர் சம்பளம் ஆகிய நலன்களை கருத்திற் கொண்டு பல இலங்கை படையினர் ரஷ்ய போரில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் ரஷ்யாவில் உயிரிழந்ததாக கூறப்படும் இலங்கையர், இலங்கையில் இராணுவத்தில் இணைந்திருந்த போது வெறும் 20,000 ரூபா சம்பளத்தையே பெற்றுக்கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இரண்டு இலங்கையர்கள் அண்மையில் ரஷ்யாவின் Dontesk பகுதியில் கொல்லப்பட்டதாகவும், கடந்த ஆண்டு இறுதியில் மூன்று இலங்கையர்கள் உக்ரைனில் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பதினைந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் உலகில் சனத்தொகையின் சதவீதத்தின் அடிப்படையில் கூடுதல் எண்ணிக்கையிலான படை பலத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்கின்றது.

கடந்த 2018ஆம் ஆண்டில் இலங்கையில் படைவீரர்களின் எண்ணிக்கை 317,000 என உலக வங்கி அறிக்கையிட்டிருந்ததுடன் இது பிரித்தானியாவின் வழயைமான படைவீரர்களின் எண்ணிக்கையை விடவும் இரட்டிப்பு எண்ணிக்கையாகும்.

தமிழர் தாயகப் பிரதேசங்களின் சில இடங்களில் இரண்டு சிவிலியனுக்கு ஒரு படைவீரர் என்ற அடிப்படையில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் ரஷ்ய இராணுவம் வெளிநாட்டு படையினரை ஆட் சேர்ப்பதற்கான திட்டத்தை அறிவித்திருந்ததுடன் ரஷ்ய கடவுச்சீட்டை துரித கதியில் பெற்றுக்கொடுக்கவும், மாதாந்தம் 2000 டொலர் சம்பளம் வழங்கவும் உறுதிமொழி வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஓய்வு பெற்றுக்கொண்ட படைவீரர்கள் ரஷ்ய படையில் இணைந்து கொண்டுள்ளதாகவும் மேலும் பலர் இணைந்து கொள்ள உள்ளதாகவும் அரச புலனாய்வுப் பிரிவினர் விசேட புலனாய்வு அறிக்கை ஒன்றை பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்னவிடம் ஒப்படைத்துள்ளனர்.

இலங்கை இராணுவப் படையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு இராணுவத்தில் இணைத்து கொள்வதற்கான முகவர்களாக தொழிற்பட்டு வருவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினை நடத்திச் சென்ற இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் சுற்றுலா வீசாக்கள் மூலம் சென்று படைகளில் இணைந்து கொள்வதாகத் குறிப்பிடப்படுகின்றது.

அந்த வகையில் முதலில் இந்தியாவின் டெல்லிக்கு சென்று அங்கிருந்து போலந்து சென்று அசர்பைஜான் வழியாக உக்ரைன் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version