இலங்கை

வாகன இறக்குமதிக்கு அனுமதி! வெளியானது அறிவிப்பு

Published

on

வாகன இறக்குமதிக்கு அனுமதி! வெளியானது அறிவிப்பு

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு சில வாகனங்களை மட்டும் இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக மாத்திரம் அமைச்சரவை அனுமதிக்கேற்ப வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தயாரிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமென அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் (Sri Lanka) தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, வாகன இறக்குமதிக்கான தடையை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சில அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கைக்கு பயணம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்தும் வாகனங்களை 6 வருடத்துக்கு மேல் பயன்படுத்த முடியாது.

சுற்றுலாத்துறையின் ஒரு சம்பிரதாயமாக குறித்த நடவடிக்கை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்கமைய, தற்போது சுற்றுலா பயணிகளால் பயன்படுத்தப்படும் வாகனங்கள் சிறந்த நிலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது சுற்றுலாத்துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அத்தியாவசிய தேவை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதாரத்துக்கு பாரிய பங்காற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டியது எமது பொறுப்பு“ என தெரிவித்துள்ளார்.

Exit mobile version