இலங்கை

மைத்திரிக்கு எதிராக திரும்பிய சந்திரிக்கா

Published

on

மைத்திரிக்கு எதிராக திரும்பிய சந்திரிக்கா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சமர்ப்பித்த மனு இன்றைய தினம்(04) பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவி வகிப்பதற்கு மைத்திரிக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சமர்ப்பித்த மனுவில், கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மைத்திரிபால சிறிசேன பொறுப்பற்ற முறையில் செயற்பட்டமையினால் கட்சிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, கட்சியின் தலைவராகவும் நாட்டின் அதிபராகவும் கடமையாற்றிய மைத்திரிபால சிறிசேன தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியதன் காரணமாகவே ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version