இலங்கை

ஒரு வருடத்திற்கு முன்னர் மைத்திரி வெளியிட இருந்த தகவல்! தடுத்து நிறுத்திய கட்சியின் முக்கியஸ்தர்கள்

Published

on

ஒரு வருடத்திற்கு முன்னர் மைத்திரி வெளியிட இருந்த தகவல்! தடுத்து நிறுத்திய கட்சியின் முக்கியஸ்தர்கள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஒரு வருடத்திற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) அறிக்கையொன்றை வெளியிட தயாராக இருந்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க(Duminda Dissanake) தெரிவித்துள்ளார்.

மேலும், தான் உள்ளிட்ட குழுவினர் இணைந்து மைத்திரியின் அந்த திட்டத்தை தடுத்ததாகவும் துமிந்த திஸாநாயக்க கூறினார்.

சிங்கள ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகும். ஏற்கனவே தாக்குதல் தொடர்பில் மைத்திரி 100 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டிய ஒருவராகும்.

மேலும் அவருக்கு நூற்றுக்கணக்கான வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கு உள்ள நபரின் மனநிலையே எவ்வாறு இருக்கும். இவ்வளவு வழக்குகள் உள்ள அவரது மனநிலை மட்டம் எப்படியிருக்கும் என்பதனை யோசித்து பாருங்கள். வீட்டில் சென்று உறங்கவும் முடியாது.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் ஓரிரண்டு நாட்களில் 100 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில் அவர் என்ன செய்கின்றார் என அவருக்கே தெரியாது. கனவிலும் உயிர்த்த ஞாயிறு உயிர்த்த ஞாயிறு என கூறிக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகளே உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version