இலங்கை

முறியடிக்கப்பட்ட பசிலின் முயற்சி

Published

on

முறியடிக்கப்பட்ட பசிலின் முயற்சி

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி நாடாளுமன்றத்தை கலைக்க மேற்கொள்ளப்பட்ட பசில் ராஜபக்சவின் முயற்சி முற்றாக தோல்வியடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது அரசியல் ரீதியாக சாதகமானது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து, அரசியலமைப்பு ரீதியில் அதிபர் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தற்போதைக்கு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தப் போவதில்லை எனவும் அதிபர் ரணில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அவசர நாடளுமன்ற தேர்தலை நடத்துவதற்காக நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பசில் ராஜபக்சவுக்கு விசுவாசமானவர்கள் நிறைவேற்ற முயற்சித்துள்ளனர்.

எனினும், அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான நாடளுமன்ற உறுப்பினர்கள் போதாத காரணத்தினால் அந்த முயற்சி இதுவரை தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version