இலங்கை

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க காத்திருக்கும் நாமல்: எதிர்ப்பு வெளியிடும் மகிந்தவின் சகா

Published

on

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க காத்திருக்கும் நாமல்: எதிர்ப்பு வெளியிடும் மகிந்தவின் சகா

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு உதவுவதைத் தவிர்ப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுச் சின்னத்தில் தேசிய வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

கம்பஹா மாவட்ட முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்களுடன் கட்சி காரியாலயத்தில் நேற்று (2) இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிரணியினர் என்ன சொன்னாலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எண்ணம் தமக்கு இல்லை எனவும், ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமானால் அதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு தேவை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பில் கட்சியில் கலந்துரையாடல் எதுவும் இல்லை எனவும், அவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால் அவருக்கு அரசியலில் உதவி செய்வதை தவிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version