இலங்கை

குடும்ப வன்முறைகளுக்கெதிராக விரைவில் புதிய சட்டமூலம்

Published

on

குடும்ப வன்முறைகளுக்கெதிராக விரைவில் புதிய சட்டமூலம்

தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று(02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்த பின்னர் தேசிய மகளிர் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வாய்ப்பு கிட்டுமென கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, மாத்தறை, மட்டக்களப்பு, அநுராதபுரம், மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தகாதமுறைக்கு உள்ளான பெண்களுக்கான 11 தற்காலிக தடுப்பு நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாலின சமத்துவ சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதோடு வர்தமானியில் அறிவிப்பதற்காக தகவல்கள் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version