இலங்கை

ஸ்கொட்லண்ட் யார்ட் – அமெரிக்க உளவு நிறுவனங்களை விசாரணைக்கு அனுமதிக்கவும்

Published

on

ஸ்கொட்லண்ட் யார்ட் – அமெரிக்க உளவு நிறுவனங்களை விசாரணைக்கு அனுமதிக்கவும்

புதிய ஜனாதிபதியாக தாம், பதவியேற்றால் ஸ்கொட்லண்ட் யார்ட் (Scotland yard) மற்றும் அமெரிக்க உளவு நிறுவனம் (FBI ) போன்றவற்றுடன் இணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி வழங்குவேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்(02.04.2024) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.

பதவியேற்ற பின் இரு மாத காலப்பகுதிக்குள் 1948 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் கீழ் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்ட ஆறு வாரங்களுக்குள் ஸ்கொட்லண்ட் யார்ட் (Scotland yard) மற்றும் அமெரிக்க உளவு நிறுவனம் (FBI ) போன்றவற்றுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version