அரசியல்

ரணிலின் சூழ்ச்சியில் மகிந்தவை காய்வெட்டும் முக்கிய அரசியல்வாதிகள்

Published

on

ரணிலின் சூழ்ச்சியில் மகிந்தவை காய்வெட்டும் முக்கிய அரசியல்வாதிகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் நோக்கில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர் கட்சியை விட்டு விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதற்கமைய, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்தன, பிரமித பண்டார தென்னகோன் உள்ளிட்ட ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் குழுவொன்று பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போது கட்சி வேறுபாடின்றி ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது தொடர்பாக இந்தக் குழுவினருக்கும் ராஜபக்ச ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்படி, இந்தக் குழு ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாடல் நடவடிக்கை மஹிந்தானந்த அளுத்கமயே தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலக திட்டமிட்ட உறுப்பினர்கள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version