இலங்கை

மைத்திரியிடம் தகவல் சொன்ன மர்ம நபரைத் தேடும் குற்றப்புலனாய்வுப் பிரிவு

Published

on

மைத்திரியிடம் தகவல் சொன்ன மர்ம நபரைத் தேடும் குற்றப்புலனாய்வுப் பிரிவு

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யாரென்ற தகவலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறிய அந்த மர்ம நபரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இப்போது தேடத் தொடங்கியுள்ளனர்.

வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே இந்தத் தகவலை அவர் கூறினார் என்று மைத்திரி, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கூறியிருந்தார்.

இதனையடுத்து இப்போது அந்த நிகழ்வு இடம்பெற்ற இடத்தின் சி.சி.ரி.வி. காணொளிகளை அவர்கள் சோதித்துள்ளனர்.

இதேவேளை நல்லாட்சி அரசு சீனாவுடன் நெருங்கிச் செயற்பட்டது. அதன் காரணமாக, கோபமடைந்த நாடே இந்தத் தாக்குதலை நடத்தியது என்று அந்த நபர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் சொன்னதாக அவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கவுள்ளனர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பின்னர் சட்டமா அதிபரின் ஊடாக அது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

Exit mobile version