இலங்கை

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Published

on

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடும் போது(28.03.2024) இன்றையதினம்(01.04.2024)அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி சிறிது உயர்வடைந்துள்ளதுடன், விற்பனை பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம்

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (01.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.10 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 226.96 ரூபாவாகவும், கொள்வனவு விலை 217.01 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 330.87 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 317.11 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 386.95 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 371.56 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Exit mobile version