இலங்கை

விரைவில் திறக்கப்படவுள்ள துறைமுக நகருக்கான அதிவேக வீதி

Published

on

விரைவில் திறக்கப்படவுள்ள துறைமுக நகருக்கான அதிவேக வீதி

கொழும்பு– இங்குறுகடை சந்தியில் இருந்து துறைமுக நகரம் வரை தூண்கள் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பால அதிவேக வீதி எதிர்வரும் ஜூலை மாதத்தில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிவேக வீதியின் 80 வீதமான கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக நிர்மாண பணிகளை மேற்கொண்டுள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், இங்குறுகடை, புறக்கோட்டை, அளுத்மாவத்தை, காலி முகத்திடல் மற்றும் துறைமுக நகரம் ஆகிய 5 உள்நுழைவுகளை இந்த அதிவேக வீதி கொண்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

5.3 கிலோமீட்டர் நீளமான இந்த அதிவேக வீதி நான்கு ஒழுங்கைகளைக் கொண்டுள்ளதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக 28 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version