இலங்கை

கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ரணில் வழங்கிய கோரிக்கை

Published

on

கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ரணில் வழங்கிய கோரிக்கை

இந்திய பிரத்தியேக பொருளாதார மண்டலம் வழியாக தனது கடற்றொழிலாளர்கள் தொழில் நிமித்தம் அரபிக்கடலுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா இன்னும் பதிலளிக்கவில்லை.

கடந்த வருடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்த போது இலங்கையின் சார்பில் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இந்திய பொருளாதார மண்டலத்தின் ஊடாக அரபிக்கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு மொத்த தூரத்தில் 400 கடல் மைல்கள் தூரம் குறையும். இல்லையேல், இலங்கையின் கடற்றொழிலாளர்கள், நீர்கொழும்பு, திக்கோவிட்ட, பேருவளை மற்றும் மாத்தறை வழியாக மாலைதீவைச் சுற்றி நீண்ட பாதையில் சென்றே அரபிக்கடலில் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

அத்துடன் தற்போது இலங்கை கடற்றொழிலாளர்கள், அரபிக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் வழியில் சட்டவிரோதமாக இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் போது இந்திய கடலோர காவல்படையினரால் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

இதனை மையப்படுத்தியே இலங்கையின் கோரிக்கை இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் பதில் வழங்கப்படவில்லை.

அதேநேரம் இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத கடற்றொழில் தொடர்பிலும் இன்னும் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை.

Exit mobile version