இலங்கை
வளர்ச்சிப் போக்கை காட்டும் இலங்கை ரூபா

வளர்ச்சிப் போக்கை காட்டும் இலங்கை ரூபா
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கை ரூபாவின் அதிக மதிப்புப் போக்கு தொடர்ந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
2024 மார்ச் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 7.6 வீதத்தால் அதிகரித்துள்ளது.
2024 மார்ச் 28 வரையிலான காலப்பகுதியில், யூரோ, பவுண்ட் ஸ்டெர்லிங், ஜப்பானிய யென், இந்திய ரூபாய் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் போன்ற பிற முக்கிய நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாய் அதிகரித்துள்ளது.