இலங்கை

வெங்காய இறக்குமதி தொடர்பில் சீனாவை நாடிய இலங்கை

Published

on

வெங்காய இறக்குமதி தொடர்பில் சீனாவை நாடிய இலங்கை

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஏற்றுமதி தடையை அடுத்து இலங்கை, வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்காக சீனாவை நாடியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வெங்காய ஏற்றுமதித் தடைகள் உள்நாட்டு விலை அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளன.

எனவே இப்போது சீனாவிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

இலங்கையில் 2023 பருவத்தில் வெங்காய விவசாயத்திற்காக 3,500 ஹெக்டேர் ஒதுக்கப்பட்டது.

எனினும் அறுவடைக்கு முன்னர் பலத்த மழையால் விளைச்சல் மோசமாக பாதிக்கப்பட்டது” தெரிவித்துள்ளார்.

Exit mobile version