இலங்கை

நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சட்ட நடவடிக்கை எடுக்கும் அமைச்சர்

Published

on

நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சட்ட நடவடிக்கை எடுக்கும் அமைச்சர்

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் (sri lanka freedom party) பதவிகளில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக துமிந்த திஸாநாக்க (Thuminda Dissanaka) மற்றும் லசந்த அலகியவண்ணவுடன் இணைந்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர் லசந்த அலகிய வண்ண மற்றும் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சித் தலைமையகத்தில் இன்று (30.3.2024) செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு மகியங்கனை தொகுதி அமைப்பாளர் கே.பி. குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஹெக்டர் பெத்மகே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், அமைச்சர் மஹிந்த அமரவீர சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version