இலங்கை

குடல் வெடித்து இளைஞர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கையில் காரணம்

Published

on

குடல் வெடித்து இளைஞர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கையில் காரணம்

தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது ஆசனவாய் மூலம் ஆபத்தான சுவாச காற்றினை செலுத்தி குடல் வெடித்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு தொழிலாளர்களை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நிறுவனத்தில் பணியாற்றிய பாணந்துறை, அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தேஷான் மதுஷங்க என்ற 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (25 ஆம் திகதி) பிற்பகல், குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் தனது இரு நண்பர்கள் கேலியாக உயிரிழந்த இளைஞனின் ஆசனவாயில் சுவாசக் குழாயைப் பிடித்துள்ளனர்.

இதன்போது, குறித்த இளைஞர் குடல் வெடித்து உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற (29ஆம் திகதி) பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தொழிலாளர்கள் இருவரும் திஸ்ஸமஹாராமய பிரதேசத்தை வசிப்பவர்கள் என்பதுடன் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொ.ச. குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி ஒசித லங்கா டி சில்வாவின் பணிப்புரையின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Exit mobile version