இலங்கை

இலங்கை முழுவதும் மக்களை ஏமாற்றி பல மில்லியன் ரூபா மோசடி

Published

on

இலங்கை முழுவதும் மக்களை ஏமாற்றி பல மில்லியன் ரூபா மோசடி

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் உணவுப்பொருட்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதாக நடித்து ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோசடியான முறையில் 50 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை பெற்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மாரஸ்ஸன பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய நபர் ஒருவர் தலத்துஓயா பொலிஸ் பிரிவில் பதுங்கியிருப்பதாக கடுகன்னாவ பொலிஸ் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் கண்டி, வலப்பனை மற்றும் கடுகன்னாவ உள்ளிட்ட பல பிரதேசங்களில் பணத்தை மோசடி செய்துள்ளார்.

கொழும்பில் இருந்து பொருட்களை லொறிகளுக்கு ஏற்றும் வழியில், குறித்த நபர் பொருட்களை திருடுவதாகவும் மேலும் இந்த பொருட்களில் உரங்கள், சீனி, மா, பருப்பு மற்றும் அரிசி ஆகியவை அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

கடுகன்னாவ பொலிஸாரால் கண்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி பிரதான நீதவான் ஸ்ரீநாத் விஜேசேகர உத்தரவிட்டார்.

Exit mobile version