இலங்கை
பண்டிகை காலத்தில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பண்டிகை காலத்தில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பண்டிகைக் காலங்களில் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், உணவு வகைகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சோதனையிட தொடங்கவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 3,000 பொது சுகாதார பரிசோதகர்கள் கடைகளை பரிசோதிப்பதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது தயாரிக்கப்பட்ட பல உணவு மாதிரிகள் சுவை பரிசோதகர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும், பண்டிகை காலத்தில் உணவு தயாரிக்கும் நபர்களின் மருத்துவ சான்றுகளை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை,பண்டிகைக் காலத்திற்காக உற்பத்தி செய்யப்படும் பல்வேறு உணவுப் பொருட்களை பரிசோதகர்களுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,பொது மக்கள் உணவுப்பொருட்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் கூறியுள்ளார்.