இலங்கை

இலங்கையில் வெள்ளையாக மாற முயற்சிப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

Published

on

இலங்கையில் வெள்ளையாக மாற முயற்சிப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டு சருமத்தை ஒளிரச் செய்யும் க்ரீம் ஒன்று விற்பனை செய்யப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தோல் நோய்களுக்கான மருந்தாக விசேட வைத்தியர்களால் மாத்திரம் பரிந்துரைக்கப்படும் மருந்து வகையொன்று கொழும்பில் உள்ள வாசனை திரவியங்கள் மற்றும் கிரீம் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

குறித்த க்ரீமை கொள்வனவு செய்யும் சிலர் சாதாரண க்ரீம்களுடன் கலந்து சருமத்தை பளபளக்கும் மருந்தாக விற்பனை செய்வதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறிது காலத்திற்குள் சருமம் வெள்ளையாகிவிடும் என்ற கருத்து நிலவுவதால், மருந்து விற்பனை அதிகரித்துள்ளது. அதற்கமைய, இந்த மருந்தை கண்டுபிடிப்பதற்காக மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் புறக்கோட்டை பகுதிக்கு சென்றனர்.

வாசனை திரவியங்கள் மற்றும் கிரீம்கள் விற்கப்படும் இடங்களில் மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் நாட்டில் பதிவு செய்யப்படவில்லை என்பதும், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்தை மருத்துவரின் பரிந்துரைப்படி மிகக் குறைந்த காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மருந்துப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, மருந்துகள் அனைத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் விற்பனை செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.

Exit mobile version