இலங்கை

விசேட பண்டவரி குறைப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு

Published

on

விசேட பண்டவரி குறைப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு

புதிதாக இறக்குமதி செய்ப்படும் அரிசிக்கான விசேட பண்டவரி குறைக்கப்பட மாட்டாது என நிதி இராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்தியா வெங்காய ஏற்றுமதியை இடைநிறுத்தியமை இதற்கு காரணமாகும்.

ஜனவரி மாதத்தில் கீரி சம்பா விலை வெகுவாக அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் ஜீ ஆர் 11 ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கேற்ப முதற்கட்ட அரிசி கொண்டுவரப்பட்டதுடன் அவை துறைகத்தில் இருந்து விடுவிக்கப்படவில்லை அவை தேங்கியுள்ளன.

எனவே துறைமுகத்தில் தேங்கியுள்ள பொருட்களுக்கு மாத்திரமே விசேட பண்டவரி குறைக்கப்பட்டுள்ளது. புதிதாக இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு இந்த நடைமுறை பொருந்தாது என தெரிவித்துள்ளார்.

Exit mobile version