இலங்கை
யாசகம் பெறும் குழந்தைகள் தொடர்பில் தகவல்
யாசகம் பெறும் குழந்தைகள் தொடர்பில் தகவல்
நாடு முழுவதும் யாசகம் செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை 20,000 முதல் 30,000 வரை உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புள்ளி விபரவியல் மற்றும் தரவுக் கற்கைப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள, நாடு முழுவதும் உள்ள குழந்தைகளின் தற்போதைய நிலைமை குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும் முகமாக குருநாகல், அநுராதபுரம், அம்பாறை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
2019ஆம் ஆண்டில் குறிப்பிட்ட அரசு சாரா அமைப்பு நடத்திய முந்தைய ஆய்வுகளின் மூலம், நாடு முழுவதும் 15,000 யாசகம் பெறும் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், தெருவோர குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது
கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலைமையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிறுவர்களை கொண்டு யாசகம் செய்வது சட்டப்படி குற்றமாகும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சானக உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.