இலங்கை

புத்தாண்டு காலத்தில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

Published

on

புத்தாண்டு காலத்தில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

புத்தாண்டு காலத்தில் வீடுகளில் ஏற்படும் விபத்துகள், சாலை விபத்துகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக புத்தாண்டு தினத்திலும் அதற்கு மறுநாளிலும் விபத்துகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாகவும், சிறு குழந்தைகள் மற்றும் இளைஞர்களே இந்த விபத்துகளுக்கு முகம் கொடுப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு காலம் என்பது விபத்துக்கள் நிறைந்த காலம் என்பதால் புத்தாண்டு விளையாட்டு, வாகனம் ஓட்டுதல், பட்டாசு வெடித்தல் போன்றவற்றின் போது உங்கள் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கணக்கெடுப்பு தரவுகளின்படி, பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகள் கை மற்றும் விரல்களில் ஏற்படுவதுடன், சுமார் 46%, விபத்துக்கள் கண்கள் மற்றும் முகம் மற்றும் தலையில் 17% விபத்துக்கள் ஏற்படுவதாக தெரியவருகின்றது.

Exit mobile version