இலங்கை
மொட்டு கட்சியின் முக்கிய கூட்டம் தொடர்பில் தகவல்
மொட்டு கட்சியின் முக்கிய கூட்டம் தொடர்பில் தகவல்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கிய கூட்டமொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி கட்சியின் நிறைவேற்றுச் சபைக் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், கட்சியின் உள்விவகாரங்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.