இலங்கை

அரச வாகனங்கள் தொடர்பில் தகவல்

Published

on

அரச வாகனங்கள் தொடர்பில் தகவல்

இலங்கையில் அரச வாகனங்கள் ஒரு கிலோமீட்டர் இயங்க 300 ரூபாயை செலவிடுகின்ற நிலையில், அந்த வாகனங்களை 100 ரூபா செலவில் இயக்க முடியும் என எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறை மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது வள மேலாண்மை குறித்த மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் துறையால் தயாரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் தரவுகளின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2022ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, அரசாங்க நிறுவனங்கள் சுமார் 82,000 வாகனங்களை வைத்திருக்கின்றன. அவற்றில் சுமார் 76,000 இயங்கும் நிலையில் உள்ளன. சுமார் 5500 வாகனங்கள் இயங்கும் நிலையில் இல்லை.

ஆராய்ச்சியின் படி, இயங்கும் நிலையில் உள்ள வாகனங்களை ஒரு கிலோமீட்டர் செலுத்துவதற்கு 300 மற்றும் 500 ரூபா வரை அரச நிறுவனங்களுக்குத் தேவைப்படும்.

எனினும், இந்த வாகனங்களை தனியாரிடம் இருந்து வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் எடுத்தால் ஒரு கிலோமீட்டருக்கு 100 அல்லது அதற்கும் குறைவான தொகையே செலவாகும்.

எனவே அரசுக்கு சொந்தமான வாகனங்களை அகற்றி இந்த செயல்முறையைப் பின்பற்றினால் சுமார் 20 பில்லியன் ரூபா அரச செலவீனங்களை சேமிக்க முடியும் என்றும் குறித்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Exit mobile version