இலங்கை

பண்டிகை காலத்தை முன்னிட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை

Published

on

பண்டிகை காலத்தை முன்னிட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை

உணவு தயாரிக்கும் நிலையங்களில் உணவு தயாரிக்கும் நபர்களின் மருத்துவ அறிக்கைகளை பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகளை பரிசோதிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 3000 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் பண்டிகைக் காலத்துக்கான உணவுகளை வாங்க வரும்போது, ​​அவர்களுக்கு உணவு தயாரிக்கக் கொடுக்கப்படும் பொருட்கள், பண்டிகைக் காலத்துக்காக தயாரிக்கப்படும் உணவு வகைகள், பழங்கள் போன்றவற்றைச் சரிபார்ப்போம்.

அதை பரிசோதகர்களுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version