இலங்கை

போலி தேரர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: களமிறங்கும் குற்றப் புலனாய்வு திணைக்களம்

Published

on

போலி தேரர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: களமிறங்கும் குற்றப் புலனாய்வு திணைக்களம்

பௌத்த மத போதனைகளுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் போலி தேரர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

போலி தேரர்களின் செயற்பாடுகள் குறித்தும் மதம்சார் விடயங்களை பாதிக்கும் பல்வேறு சம்பவங்கள் குறித்தும் பௌத்த மதம் தொடர்பான பல்வேறு அமைப்புகளினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோரின் முறைப்பாடுகளின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version