இலங்கை

ரணிலின் மாஸ்டர் பிளான் – பொறியில் சிக்கிய பசில் தரப்பினர்

Published

on

ரணிலின் மாஸ்டர் பிளான் – பொறியில் சிக்கிய பசில் தரப்பினர்

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மறைமுக ஆதரவினை வழங்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக பல்வேறு பிரிவுகளை பிரிந்து வாக்குகளை பிரிப்பதை தவிர்க்கவும் வேட்பாளரை முன்வைக்காமல் இருப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் பசில் ராஜபக்ஷ தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று கூடி கலந்துரையாடப்பட்டது.

இக்கட்டான காலங்களில் தனது கட்சி உறுப்பினர்களை பாதுகாத்த ரணில் விக்ரமசிங்கவை மறக்க முடியாது என பசில் ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவின் ஊடாக வேட்பாளரை நிறுத்தினால் அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் இருப்பதற்கு கட்சி தீர்மானித்தால், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் குழு கட்சியில் இருந்து பிரிந்து ரணிலுக்கு ஆதரவளிக்கும் என இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்சியின் ஒற்றுமைக்காக வேட்பாளர் ஒருவரை முன்வைக்கக் கூடாது என்பதே பசில் ராஜபக்சவின் கருத்தாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version