இலங்கை

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 50 இலட்சம் வரையில் அதிகரிக்க திட்டம்

Published

on

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 50 இலட்சம் வரையில் அதிகரிக்க திட்டம்

வருடாந்தம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 25 – 50 இலட்சம் வரையில் அதிகரிக்க வேண்டும் எனவும், அதிக பணம் செலவிடும் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலனறுவையில் நேற்று நடைபெற்ற “யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம்” உடனான சிநேகபூர்வ கலந்துரையாடலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்” என்ற இச்சந்திப்பில் நாட்டின் எதிர்காலம் மற்றும் தூரநோக்குக் குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, இளையோரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, அரசு மேற்கொண்டு வரும் புதிய பொருளாதார சீர்திருத்தங்களின் பிரதிபலன்கள் இன்னும் சில வருடங்களில் மக்களுக்கு கிடைக்கும் என்றும், எனவே, தங்களினதும் நாட்டினதும் எதிர்காலத்துக்கான சிறந்த வழி எதுவென்பதை நாட்டின் இளைஞர்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

 

Exit mobile version