இலங்கை

மைத்திரியிடம் சஜித் முன்வைத்துள்ள கோரிக்கை

Published

on

மைத்திரியிடம் சஜித் முன்வைத்துள்ள கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் உங்களுக்குத் தெரிந்தால், தயவு செய்து அதனை உடனே வெளிப்படுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று(24.03.2024) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், வெறுக்கத்தக்க உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத செயலுக்குக் காரணமானவர்கள் யார் என்பதை அறியதான் நான் உட்பட 220 இலட்சம் மக்கள் காத்திருக்கும் நிலையில், இனியும் காத்திருக்காமல் உயிர் தியாகம் செய்த அப்பாவி மக்களுக்காக உண்மையை வெளிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இதில் தொடர்புடையவர்கள் அனைவரும் எந்த பதவி நிலைகளில் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கூடிய தண்டனை வழங்கப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், வெளிப்படையான, பாரபட்சமற்ற மற்றும் உண்மையை வெளிப்படுத்தும், தேசிய சர்வதேச பங்குதாரர்களை ஈடுபடுத்திக் கொண்ட விசாரணை ஊடாக உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம் என கூறியுள்ளார்.

Exit mobile version