இலங்கை

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் வாய் புற்றுநோய்கள்

Published

on

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் வாய் புற்றுநோய்கள்

இலங்கையில் அதிகளவான வாய் புற்றுநோயாளர்கள் பதிவாகி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூக பல் வைத்திய பிரிவின் தலைவர் ஹேமந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

” இலங்கையில் தினமும் ஆறு புதிய வாய் புற்றுநோயாளர்கள் பதிவாகி வருவதுடன் நாளொன்றில் மூன்று உயிரிழப்புக்கள் பதிவாகி வருகின்றன.

சுமார் 50 சதவீத மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவதில்லை. மேலும், 20 வீதமான இலங்கையர்கள் புளோரைட் இல்லாத பற்பசைகளைப் பயன்படுத்துகின்றனர். இவை கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும்.

மேலும், ஒருவர் வருடத்திற்கு 10 கிலோவிற்கும் குறைவான சீனியை உட்கொள்ள வேண்டும். இருப்பினும், சராசரியாக ஒரு இலங்கையர் ஒரு வருடத்திற்கு 34 கிலோ சீனியை உட்கொள்கிறார்.

ஒரு குழந்தை இனிப்புக்களை உட்கொள்வதற்கு இடையில் குறைந்தபட்சம் இரண்டு மணித்தியாலங்கள் இடைவெளியாவது இருப்பதை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

குழந்தைகள் இனிப்பு சாப்பிடக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. இருப்பினும், நுகர்வுக்கு இடையே இடைவெளி இருக்க வேண்டும். அது மாத்திரமன்றி புளோரைட் அடங்கிய பற்பசையைக் கொண்டு பல் துலக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version