இலங்கை

9 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம்

Published

on

9 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம்

நாட்டில் 9 அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களுக்கான விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, வாடிக்கையாளர்கள் இந்த தயாரிப்புகளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விலை குறைப்பு செய்யப்படவுள்ள 9 பொருட்களின் புதிய விலைகள் பின்வருமாறு அமைகின்றன.

ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு 550 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.

சிவப்பு கௌபி ஒரு கிலோ கிராம் 52 ரூபாவினால் குறைக்கப்பட்டு 998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

1150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை கௌபி 50 ரூபா குறைக்கப்பட்டு 1100 ரூபாவிற்கு விற்கப்படும்.

பாஸ்மதி அரிசி 20 ஒரு கிலோ கிராம் 20 ரூபா குறைக்கப்பட்டு 650 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

சிவப்பு வெங்காயம் 10 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலையாக 350 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெள்ளை பெரிய வெங்காய ஒரு கிலோ கிராம் 05 ரூபா குறைக்கப்பட்டு 265 ரூபாவிற்கு விற்கப்படவுள்ளது.

சிவப்பு சீனி ஒரு கிலோ கிராம் 430 ரூபாவிலிருந்து 425 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

சோயா ஒரு கிலோ கிராம் 5 ரூபா குறைக்கப்பட்டு 595 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.

170 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கிராம் சிவப்பரிசி 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version