இலங்கை

அமெரிக்கா சென்று மீண்டும் நாடு திரும்பிய அமைச்சர்

Published

on

அமெரிக்கா சென்று மீண்டும் நாடு திரும்பிய அமைச்சர்

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை இடைநிறுத்திக் கொண்டு நேற்று இலங்கை திரும்பியுள்ளார்.

அவர் வாஷிங்டன் டிசிக்கு சென்று இறங்கியவுடன், வாக்களிப்பில் கலந்துகொள்வதற்காக நாடு திரும்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தம்மைக் கோரியுள்ளதாக அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதுவர் தனக்குத் தெரிவித்ததாக அமைச்சர் குணவர்தன நாடு திரும்பியபோது தெரிவித்துள்ளார்.

உலக வங்கி ஏற்பாடு செய்திருந்த பயிலரங்கில் கலந்து கொள்வதற்காகவே அவர் அமெரிக்கா சென்றிருந்தார்.

இந்நிலையில் பிரேரணைக்கு எதிராக வாக்களித்து நாட்டுக்கு பல வழிகளில் சேவையாற்றிய சபாநாயகருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் குணவர்தன செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று மாலை இடம்பெறவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் பிரசன்னமாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version