இலங்கை

பதவி விலகினார் அனுரகுமார

Published

on

பதவி விலகினார் அனுரகுமார

தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார்.

கோப் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமைக்கப்பட்டமையை அடுத்து அதன் உறுப்பினர்கள் பதவி விலகல் செய்து வருகின்றனர்.

அதன்படி கோப் குழுவில் இருந்த 30 பேரில் 10 பேர் பதவி விலகல் செய்துள்ளனர்.

அவர்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் நாடாளுமன்றத்திற்கு தெரிவான காமினி வலேபொட, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன.

மற்றும் ஹேஷா விதானகே மற்றும் எஸ். எம்.மரிக்கார், நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவில் இருந்து விலகிய உறுப்பினர்களில் அடங்குவர்.

இந்த வரிசையில் அநுர குமார திசாநாயக்க பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார்.

Exit mobile version