இலங்கை

மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 32 பாதாள உலகக்குழுக்கள்

Published

on

மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 32 பாதாள உலகக்குழுக்கள்

அப்பாவி மனித உயிர்களை அழித்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 32 பாதாள உலகக்குழுக்களை சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்யும் விசேட சோதனை நடவடிக்கை இன்று (19) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தெற்கு மற்றும் மேல் மாகாணங்களை மையப்படுத்தி 20 விசேட பொலிஸ் குழுக்கள் இன்று (19) முதல் இந்த சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் விசேட அதிரடிப்படைத்தளபதி ஆகியோரின் பூரண மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் இளம் திறமையான அதிகாரிகள் மற்றும் பொலிஸாரால் உருவாக்கப்பட்ட 20 படைப்பிரிவுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரையில் செயற்படும் 32 பாதாள உலகக் கும்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பாதாள உலகக்கும்பல்கள் இயங்கும் 43 பொலிஸ் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்த பொலிஸ் பகுதிகளை உள்ளடக்கும் வகையில் இன்று முதல் இந்த விசேட சோதனை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளன.

தென் மாகாணத்தை மையமாகக் கொண்ட கரந்தெனியே சுத்தா, கரந்தெனிய ராஜு, சமன் கொல்ல, பொடிலஸ்ஸி, கொஸ்கொட சுஜீ, உரகஹ இந்திக, உரகஹ மைக்கல், மிதிகம ருவான், ஹரக்கட, மிதிகம சூட்டி, மதுஷன் அப்ரு ஆகிய பாதாள உலகக் கும்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் செயற்படும் பாதாள உலகக் கும்பல்களில் கணேமுல்லை சஞ்சீவ, வல்லி சுரங்க, வல்லி சாரங்கா, இரத்மலானே அஞ்சு, டுபாய் நிபுனா, ஹினாதயான மகேஷ், கஞ்சிபனி இம்ரான், புகுதுகண்ண, செல்லிஜியின் மகன், ரிமோஷன், சுட்டா, அத்துரிகிரிய லடியா, கிம்புலாலேலே, கும்புலலேலே ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த பாதாள உலக கும்பல் செயற்படும் பகுதிகளில் பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version