இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள 6000இற்கு மேற்பட்ட கொள்கலன்கள்

Published

on

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள 6000இற்கு மேற்பட்ட கொள்கலன்கள்

நாட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய 6,000 கொள்கலன்கள் கொழும்புத்துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுங்க நிதியத்தை திறைசேரிக்கு உள்வாங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை சுங்க அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை(15) முதல் மேலதிக நேர சேவையில் இருந்து விலகி, சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் 6,000இற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக கொள்கலன் சேவை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த பிரச்சினைக்கான உரிய தீர்வொன்றை இன்றைய தினத்திற்குள் வழங்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version