இலங்கை

தண்ணீர் தேவை அதிகரிப்பு: தடைப்பட்டுள்ள நீர் விநியோகம்

Published

on

தண்ணீர் தேவை அதிகரிப்பு: தடைப்பட்டுள்ள நீர் விநியோகம்

தினசரி தண்ணீர் தேவை பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுவாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நீர் வழங்கல் தொடர்பான முறைப்பாடுகள் 30 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அதிகபட்ச கொள்ளளவிற்கு தண்ணீர் விடப்பட்டாலும், தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் சில நுகர்வோருக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

தினசரி தண்ணீர் தேவை பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அத்துடன் தற்போதைய நிலவரத்தில் சில பகுதி மக்களுக்கும், நீர் வழங்கல் திட்டங்களின் முடிவில் உள்ள மக்களுக்கும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து நீர் வழங்கல் அமைப்புகளும் இந்த நாட்களில் எவ்வித பிரச்சினையும் இன்றி இயங்கி வருகின்றன. மேலும், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையிடம் இன்னும் ஒரு மாதத்திற்கு போதுமான நீர் கொள்ளளவு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version